திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் : அந்தநல்லூர், லால்குடி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூா், துறையூா், மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளம் : ரூ. 15,700 – ரூ. 50,000 வரை
வயது வரம்பு : 01. 07.2023 அன்று 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித்தகுதி : 8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பத்தினை tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.