மராட்டிய மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இதன் காரணமாக தேர்தலில் வாக்களிக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.