fbpx

பள்ளி சீருடையில் போதையில் தள்ளாடும் அரசுப் பள்ளி மாணவன்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

அரசுப் பள்ளி மாணவர், பள்ளி சீருடையில் குடித்துவிட்டு தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர், பள்ளி சீருடையில் மது அருந்தி விட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுவதும், அந்த மாணவனை சக மாணவர் ஒருவர் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி வருவதோடு மது போதையில் பள்ளிக்கு செல்வதால் ஆசிரியர்களிடம் தகாராறில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து அறங்கேறி வருகிறது.

பள்ளி சீருடையில் போதையில் தள்ளாடும் அரசுப் பள்ளி மாணவன்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனவும் பள்ளி மாணவர்களுக்கு போதை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chella

Next Post

#கடலூர் : நாய்க்குட்டிகளை காக்கும் பாம்பு..நெகிழ்ச்சியாக பார்த்து வந்த மக்கள்.. !

Tue Dec 13 , 2022
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள பாலூரில் சம்பத் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டிடத்தில் அருகில் நேற்று முன்தினத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. குட்டிகளை அங்கேயே தனியே விட்டுவிட்டு உணவுகளை தேடி தாய் நாயானது வெளியே சென்றுள்ளது. இந்த நிலையில் அங்கு ஊர்ந்து வந்த நல்ல பாம்பானது , நாய்க்குட்டிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு அருகே நின்று கொண்டது. இதனை பார்த்த அங்குள்ள மக்கள் பாம்பு, நாய்க்குட்டிகளை […]

You May Like