fbpx

அரசுப் பள்ளி மாணவர்களே ரூ.12 ஆயிரத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! நாளை ஹால்டிக்கெட் வெளியீடு..!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 24ஆம் தேதி நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும், ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நாடே எதிர்பார்க்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.16ஆம் தேதி..? பரபரப்பில் அரசியல் களம்..!!

Tue Jan 23 , 2024
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா? அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கப்போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக, அதாவது ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதே முறையில் 2024ஆம் ஆண்டு தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு […]

You May Like