fbpx

தனியார் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி கட்டுப்பாடு..!! இவர்களை பணியில் சேர்க்க தடை..!!

கேரளா இளம்பெண் பலாத்கார சம்பவத்தை அடுத்து வாடகை கார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் இரவு நேரத்தில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். 112 அவசர சேவை எண் பற்றி பயணிகளுக்கு செயலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றப்பின்னணி கொண்ட ஓட்டுநர்களை எந்த காரணம் கொண்டும் பணியில் சேர்க்கக்கூடாது.

தனியார் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி கட்டுப்பாடு..!! இவர்களை பணியில் சேர்க்க தடை..!!

ஓட்டுநர்கள் நடத்தை குறித்து மாதம் ஒரு முறை கண்காணிக்க வேண்டும். அத்துடன் உணவு விற்பனை பிரதிநிதிகள் உரிய முகவரிக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய வேண்டும். வாடகைகார், ஆட்டோ டிரைவர்கள், உணவு விற்பனை பிரதிநிதிகள் ஏதாவது தவறு செய்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஷ்ரத்தா கொலை வழக்கு..!! கணிக்க முடியாத நகர்வுகள்..!! காதலன் அப்தாப் குறித்து சிறை அதிகாரி பகீர் தகவல்..!!

Sun Dec 4 , 2022
ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அப்தாப் சிறையில் இருக்கும் நிலையில், அவர் குறித்து சிறை அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில், போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் […]

You May Like