ஐ ஐ எப் எல் வெல்த் ஹியூரான் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள 2022 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்காரரான கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.ஐ.எப்.எல்.வெல்த் ஹியூரான் இந்தியா அமைப்பு 2022ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை விட கவுதம் அதானி 3 லட்சம் கோடிகள் வித்தியாசத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1,612 கோடி சம்பாதித்துள்ளார். தற்போது அவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.10,94,9400 கோடியாகும். இது அம்பானியை விட 3 லட்சம் கோடி அதிகமாகும்.

2012-ம் ஆண்டில் அதானியின் சொத்து அம்பானியின் சொத்துக்களை ஒப்பிடும் போது 6ல் ஒரு பங்கு என இருந்தது. 10 ஆண்களில் அதானி இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் அம்பானியை முந்தி முன்னுக்கு வந்துள்ளார். fரடந்த ஆண்டு அம்பானியின் சொத்து அதானியின் சொத்தைக் காட்டிலும் ஒரு லட்சம் கோடி அதிகமாக இருந்தது. ஒரே ஒரு ஆண்டில் அம்பானியை 3 லட்சம் கோடி ரூபாய் அதிகமான வருமானம் ஈட்டி பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளார்.

கவுதம் அதானி , எரிசக்தி மற்றும் போர்ட் , புதுப்பிக்கதக்க ஆற்றல் ஆகியவற்றிலும் முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தை பிடித்துள்ள அம்பானி டெலிகாம் , பெட்ரோ கெமிக்கல் ஆகிய துறைகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார்.
சைரஸ் பூனாவாலா , இவர் தடுப்பூசிகளின் அரசர் என்று போற்றப்படுபவர் பார்மா நிறுவனங்கள் , சில்லரை வர்த்தகங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வளர்ச்சி பெற்று முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக 3 வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.41,700 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்மா நிறுவனங்களின் தொழிலதிபர் திலிப் சங்கவி , மற்றும் கோடாக் மகிந்திரா வங்கியின் தலைவர் ஆகியோரும் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளனர். ஜெய் சவுத்ரி ,, குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் கடந்த ஆண்டு முதல் 10 இடங்களை பிடித்து இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 10 ல் இடம் பிடிக்கவில்லை. ஷிவ் நாடார் குழுமம் ரூ.1.85 லட்சம் கோடியில் 4வது இடத்தை பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது குறைவுதான். இதைத் தொடர்ந்து ராதாகிஷன் தமணி , வினோத் ஷட்டிலால் அதானி , ஹிந்துஜா குடும்பம் ,எல்.என் மிட்டல் குடும்பம் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சில பணக்காரர்கள் அவர்களின் நிறுவனத்தின் சொத்துக்களை பெருக்கி அசுர வளர்ச்சி பெற்று உயர்ந்துள்ளனர். 2018ம் ஆண்டு கவுதம் அதானி 8வது இடத்தில் இருந்தார். இவரது சொத்து மதிப்பு 15.4 மடங்கு உயர்ந்துள்ளது. அவரது சகோரர் 49வது இடத்தில் இருந்தார். தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போல் பூனாவாலா 2.8 மடங்கு உயர்ந்து 3வது இடத்தில் உள்ளார். ராதாகிஷன் தமணி 3.8 மடங்கு அதிகரித்து 15வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார்.

அதானி என்டர் பிரைசஸ் பங்குகளை வாங்கிய என்.டி.டி.வி. பிரணாய் ராய் அரவது மனைவி ராதிகா ராய் ஆகியோர் பணக்கார்பட்டியல்களில் 681வது போஸ்டிங்கில் மீண்டும் பட்டியலுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து 2000 கோடி ரூபாய் சொத்து ஈட்டியுள்ளனர். இந்த பட்டியலில் 19 வயதே நிரம்பிய மிகவும் இளம் வயதில் இருப்பவர் ஜெப்டோ நிறுவனம் கவிவால்யா வோஹ்ரா . இவர் இந்த பட்டியலில் புதியதாக வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்வு 37 வயது மிக இளமையான வயதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 1103 நேர் இப்பட்டியலில் உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 96 சதவீதம் அதிகம். ஒட்டு மொத்த சொத்துக்கள் வாரியாக 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 1சதவீதம் சரசரியாக குறைந்துள்ளது. என இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இப்பட்டியலில் இருந்து 50 பேர் வெளியேறி உள்ளனர். 415 பேர் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளனர். 602 பேரின் சொத்துக்கள் சிலருக்கு அதிகரித்துள்ளது. சிலருக்கு அதே அளவில் கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் உள்ளது. இந்த ஆண்டு 221 பில்லினியர்கள் கடந்த ஆண்டை விட 16 பேர் குறைவாக உள்ளனர். ரூ.2700 கோடியுடன் ரங்கராஜன் (டேட்டா பேட்டர்ன்ஸ் ) என்ற நிறுவனம் புதியதாக நுழைந்துள்ள நிறுவனம் ஆகும். இந்த பட்டியலில் 94 பேர் என்.ஆர்.ஐ.. 82 சதவீதம் பேர் 50 வயதைக் கடந்தவர்கள். 0.6 சதவீதம் மட்டுமே 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது இப்பட்டியலில் கவனிக்க வேண்டிய ஸ்வாரஸ்யமான விஷயம். மேலும் கிரெட் , அப்ஸ்டாக் , ஒன்கார்ட் நிறுவவனங்களும் இந்த பட்டியலில் புதியதாக வந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.