fbpx

இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் GPay சேவை..! பணம் அனுப்ப முடியாது..! Google Wallet-க்கு மாற்றப்படும் பயனர்கள்..!

பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது. பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் GPay சேவை ஜூன் 4, 2024 முதல் Google மூடப் போகிறது என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்தச் செய்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் பயனர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. Gpay மூடப்படும் என்ற இந்த செய்தி உண்மைதான். இதை கூகுள் நிறுவனமே உறுதி செய்தது. கூகுளின் இந்த முடிவால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படப் போகின்றன என்பதை தற்போது பார்க்கலாம். கூகுளின் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுத்தப் போகிறது. அதாவது, கூகுள் பே தடை செய்யப் போவது இந்தியாவில் அல்ல.. அமெரிக்காவில் தான்.

ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும். அதேசமயம் மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து பயனர்களும் Google Wallet-க்கு மாற்றப்படுவார்கள். இந்த தேதிக்குப் பிறகு, Google Pay அமெரிக்காவில் முற்றிலும் பயனற்றதாகிவிடும். கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் Google Wallet-க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 180 நாடுகளில் Google pay ஆனது Google Wallet ஆக மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

English Summary

Google has recently announced that its Google Pay (popularly known as GPay)- a payment service will be discontinuing its services in the United States starting from June 4 (2024)

Kathir

Next Post

ஆனந்த் அம்பானி மட்டுமல்ல!... வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்ட அம்பானி தலைமுறையினர்!

Sat Jun 1 , 2024
Anand Ambani-Radhika Merchant: ஆனந்த் அம்பானியை விட ராதிகா மெர்ச்சண்ட் வயதில் மூத்தவர் என்ற தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை […]

You May Like