fbpx

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட ’பாட்டி’ சுத்தியால் அடித்துக் கொலை …சென்னையில் பயங்கரம்…

சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 70 வயது பாட்டியை பேரனே சுத்தியால் அடித்துக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

சென்னை  கொருக்குபேட்டையில்  கருமாரியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தவர் விசாலாட்சி (70) . இவரது மகள் அமுதா. அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகின்றார். அமுதாவின் மகன் சதீஷ்.. சில நாட்களுக்கு முன்பு அமுதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விசாலாட்சி கொடுத்துள்ளார். அதை திருப்பித்தரவேண்டும் என்று அமுதாவிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் பேரனுக்கு பிடித்த மீன் குழம்பு , சாதம் என வகை வகையாக சமைத்து வைத்துவிட்டு பாட்டி காத்திருந்தார். அப்போது வந்த சதீசை அழைத்து சாப்பாடு ஊட்டி விட்டிருக்கின்றார் விசாலாட்சி. குடிபோதையில் இருந்த சதீஸுக்கும் விசாலாட்சிக்கும் பண விவகாரத்தில் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஸ் விசாலாட்சியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார்.

வலியால் விசாலாட்சி தரையில் விழுந்து துடிதுடித்துள்ளார். டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார் சதீஸ். சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியபோது பாட்டி வெளியில் சென்றுவிட்டார். அது டி.வி. சத்தம் என கூறிவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டான். போதையில் இருந்த சதீஸ் தனது அம்மாவை அழைத்து பாட்டி கீழே விழுந்தபோது தலையில் அடிப்பட்டுவிட்டதாக கூறியுள்ளான்.

உடனடியாக அமுதா ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தை சோதனையிடுவதற்காக அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ரத்தக்கரையுடன் சதீஸ் குடிபோதையில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்துள்ளானர். சந்தேகமடைந்து விசாரணை நடத்தியலில் ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கேட்டு தாயை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறியுள்ளான். இது குறித்து தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

பாஜக புதுச்சேரியை கலவர பூமியாக்குகிறது... சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு..!

Thu Sep 22 , 2022
அமைதியாக இருந்த புதுச்சேரி மாநிலத்தை, பாரதிய ஜனதா கட்சியினர் கலவர பூமியாக மாற்றி வருவதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருக்கும் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, காவல் துறை அனுமதி வாங்கி மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அந்தப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புகுந்து தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது […]

You May Like