fbpx

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த பாட்டி!… கின்னஸ் உலக சாதனையை முறியடித்து அசத்தல்!

அமெரிக்காவில் 104 வயது பாட்டி, 13500 அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்தவர். முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்த இவர் தற்போது வயதானதால் கைத்தடி உதவியுடன் தான் நடமாடி வருகிறார்.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சாதனை படைத்தார். விமானத்திலிருந்து குதித்து 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து பாதுகாப்பாக தரையிறங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து அந்த மூதாட்டி “இதற்கு முன்பு 100 வயதில் ஸ்கை டைவ் செய்துள்ளேன். அப்போது பயம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் இப்போது பயமின்றி தாமாக குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மற்ற நாடுகளுக்கு சென்று சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன், ஸ்வீடனில் வசித்து வரும் 103 வயதான லின்னியா இங்கேகார்ட் லார்சன் 2022 மே மாதம் மிக வயதான ஸ்கைடைவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனையை 104 வயதான மூதாட்டி டோரதி தற்போது முறியடித்துள்ளார். டோரதி விரைவில் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் 105 ஆவது வயது தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

படிப்பு குறித்து ஜோவிகா பேசியது சரியா..? அதில் உள்ள பிரச்சனைகள் என்ன தெரியுமா..?

Sat Oct 7 , 2023
அம்மா ஸ்தானத்தில் அட்வைஸ் பண்றேன்னு தேவையில்லாமல் வனிதா பொண்ணு கிட்ட வாய் கொடுத்த விசித்ராவுக்கு நீயெல்லாம் என்னை பத்தி பேசாத விச்சு என நீ வா போ என்கிற அளவுக்கு விளாசி எடுத்து விட்டார் ஜோவிகா. இவரின் படிப்பு குறித்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் வேதனை என்னவென்றால், வீட்டிலிருந்தவர்களும் ஜோவிகாவின் பேச்சை தவறென்று சொல்லவில்லை. அனைவருமே கைத்தட்டுகிறார்கள். இணையவாசிகள் சிலரும் கூட. நேற்றைய போட்டியில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து […]

You May Like