தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவும், குண சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரோபோ சங்கர். அவருடைய மூத்த மகள் இந்திரஜா சங்கர், கடந்த 2019ம் ஆண்டு தமிழில் வெளியான விஜயின் “பிகில்” திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை துவங்கினார். அதற்கு முன்னதாக சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர் கார்த்தியை, இந்திரஜா சங்கர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திரஜா மற்றும் கார்த்திக் ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது வெளியான பிரமோவில் ஒரு நல்ல விஷயம் ஒன்று இந்திரஜா வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில் நானும் என்னுடைய கணவரும் அப்பா அம்மா ஆகிவிட்டோம் என்று சொல்ல, அதைக் கேட்டு நடுவராக இருக்கும் ராதா உட்பட எல்லோரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகின்றனர். பிறகு அங்கு வந்த ரோபோ சங்கர் சின்ன வயதிலேயே தாத்தாவான பிரபலம் நானாகத்தான் இருப்பேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். பிறகு விஜய் டிவி மேடையில் இந்திரஜாவிற்கு சடங்குகள் நடத்தி அழகு பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Read more ; PNB வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்….!