நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி இன்று, மத்திய கூட்டுறவு துறை அமைச்சகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்த துறையில் காலியாக இருக்கின்ற co-operative ombudsman பணிக்கான இடம் காலியாக உள்ளதாக தெரிகிறது. இந்த பணிக்கு ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிகிறது.
இந்தத் துறையில், பணியாற்ற விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் post graduate முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் குறைந்தது 10 வருட காலம் இயக்குனர், மாவட்ட நீதிபதி போன்ற பதவிகளில் பணியாற்றி முன் அனுபவம் பெற்ற நபர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல, இந்த பணியில் சேர விரும்பும் அவர்களின் வயது 70 க்கு கீழே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,23,100 முதல், 2,15,900 ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும்.
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்ய விரும்பினால் https://www.cooperation.gov.in/sites/default/files/2023-09/Cooperative%20Ombudsman_0.pdf என்ற வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, 21/9/2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.