fbpx

பெரும் சோகம்…! அரசு பேருந்து, கார் நேருக்கு நேர் மோதி விபத்து… காரில் இருந்த 6 பேர் பலி.!

கர்நாடக மாநிலம் சாத்தனூர் நகர் அருகே கெம்மலே கேட் பகுதியில் அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதனை அடுத்து கார் கன்னாபின்னமாக நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரில், நாகேஷ், புட்டராஜு, ஜோதிர்லிங்கப்பா, கோவிந்தா, குமார் ஆகிய ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் சந்தாபுரா பகுதியைச் சேர்ந்த சிலர் காரில் சாமராஜநகரில் உள்ள மலே மகாதேஷ்வரா கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காரில் இருந்த உடல்களை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக பேருந்து பயணிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்து, கார் நேருக்கு நேர் மோதியா விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது.

Kathir

Next Post

திகட்ட, திகட்ட உல்லாச வாழ்க்கை, இறுதியில் தடை விதித்த கணவன்…..!அதிரடி முடிவெடுத்த மனைவி கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்….!

Tue Aug 29 , 2023
தன்னுடைய கள்ளக்காதலுக்கும், உல்லாச வாழ்வுக்கும் இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து, தீர்த்துக் கட்டிய மனைவி காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது, உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளரான மெஹ்ராஜுதின்(45). இவருடைய மனைவி ஷாமா. ஷாமாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அகீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே, கள்ளக்காதலாக மலர்ந்தது. ஆகவே, இருவரும் அடிக்கடி […]

You May Like