fbpx

மிகப்பெரும் சோகம்..! கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழுந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த மாதம் 2ஆம் தேதி இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டிருந்தனர். குழந்தையின் கை வீங்கியதால் செவிலியர்களை தாய் அழைத்ததாகவும், ஆனால், அவர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

விஜய் பட நடிகைக்கு குழந்தை பிறந்தது..!

Sun Aug 6 , 2023
பிரபல நடிகையான இலியானா, 2012ஆம் அண்டு தமிழில் வெளியான ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜாேடியாக நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். இதற்கு முன் 2006-ல் வெளிவந்த கேடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். இந்தி நடிகையான இவர், தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 36 வயதாகும் நடிகை இலியானாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை, இவர் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாகி இருப்பதை அறிவித்து […]

You May Like