fbpx

பெரும் சோகம்..!! பைக் ரேசின் போது நேர்ந்த விபத்து..!! 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டு கோட்டையில் பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான ரேஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடந்து வருகிறது. இந்த மைதானத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் கார், பைக் ரேஸ் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் சார்பில் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான பைக் ரேஸ் போட்டி நடத்தப்பட்டது.

இதில் பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஸ் பங்கேற்றிருந்தார். தனது பிரிவுக்கான போட்டியில் 3-வது சுற்று ரேஸ் துவங்கியதும் பைக்குகள் சீறிப்பாய்ந்தன. அப்போது வளைவு ஒன்றில் திரும்பும் போது ஸ்ரேயாஸ் ஹரிஷ் ஓட்டிய பைக் சறுக்கியது. இதில் நிலை தாடுமாறி ஹரிஷ் கீழே விழுந்தார். இதில் ஹரிஷ் அணிந்து இருந்த ஹெல்மெட்டும் கழன்று விழுந்ததாக தெரிகிறது.

பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த பிற பைக்குகளும் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் தலையில் ஹரிஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவப்புக் கொடி காட்டப்பட்டு பந்தயம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே ஹரிஸ் பரிதாபாமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.

8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரிஷ், 2021 முதல் பைக் பந்தயத்தில் பங்கேற்று வந்துள்ளார். கடந்த மே மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற மினி ஜிபி ரேஸ் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த MSBK Championship (250cc category) போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்று இருந்தார். அதற்குள் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதற்கான லைசன்ஸ்களை FMSCI வழங்குகிறது. ரேஸ் டிரக்கில் இந்த லைசன்ஸ் பெற்ற சிறுவர்களும் பைக் ஓட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் இந்த லைசன்சை கொண்டு சாலையில் பைக் ஓட்ட அனுமதி கிடையாது. பைக் ரேசின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்ததற்கு மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந் அஜித் தாமஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sun Aug 6 , 2023
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வினை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. நாடு […]

You May Like