fbpx

பெரும் சோகம்..!! காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

பிரபல காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை காலமான நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான கருணாகரன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’, தனுஷ் நடித்த ‘தொடரி’, அஜித் நடித்த ‘விவேகம்’ உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் கருணாகரன் நடித்திருக்கிறார். தற்போது கூட அவர் சூர்யாவின் 44-வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 77 வயதாகும் கருணாகரனின் தந்தை காளிதாஸ் இன்று காலமானார். கேபினட் செயலக அதிகாரியாக 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில், “தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை என்று உயிர் இழந்தார்” என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : 2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!

English Summary

Comedian Karunakaran’s father passes away

Chella

Next Post

”மதுவிலக்கு பற்றி பேசுவதால் திமுக கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை”..!! திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!

Mon Sep 16 , 2024
Even if there is a rift in the alliance, Vishika is ready to face it because he is talking about prohibition.

You May Like