fbpx

பெரும் சோகம்..!! பிரபல இயக்குனர் ராஜ்குமார் கோஹ்லி காலமானார்..!! திரையுலகினர் அஞ்சலி..!!

நாகின், ஜானி துஷ்மன் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜ்குமார் கோஹ்லி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 95. இவர் இன்று காலை 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறுதிச் சடங்கு மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூஹூவில் உள்ள தனது வீட்டில் குளிக்கச் சென்ற ராஜ்குமார், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அவரது மகன் கதவை உடைத்து பார்த்துள்ளார். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.

இயக்குனர் ராஜ்குமார் கோஹ்லி நாகின், ஜானி துஷ்மன், பட்லே கி ஆக், ராஜ் திலக், ஜீனா நாய் துங்கா, பீஸ் சால் பாத் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ரீனா ராய், சுனில் தத், ஃபெரோஸ் கான், சஞ்சய் கான், ரேகா மற்றும் மும்தாஜ் நடித்த நாகின் (1976) மற்றும் ரீனா ராய், நீது சிங், சுனில் தத், சஞ்சீவ் குமார், ஜீதேந்திரா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோருடன் ஜானி துஷ்மன் (1979) ஆகியவை அவரது மிகப்பெரிய வெற்றிகளாகும். இதுன் சக்ரவர்த்தி, டிம்பிள் கபாடியா, மீனாட்சி ஷேஷாத்ரி மற்றும் வினோத் மெஹ்ரா ஆகியோருடன் பீஸ் சால் பாத் (1988) அவரது வெற்றிப் படங்களில் ஒன்றாகும்.

Chella

Next Post

ரூமுக்குள் வைத்து ஆர்.ஜே.பிராவோவை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளர்..!! ஷாக்கிங் தகவல்..!!

Fri Nov 24 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் “உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் நடிகை விசித்ரா தனது ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை நடந்த சம்பவத்தை பகிர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், ”எங்க அப்பாவுக்கு தான் […]

You May Like