உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M.ராஜூ (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
மேலும், இவர் சட்டமன்ற துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவர் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் அளியூர் கிராமத்தில் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : EMIஇல் பொருட்கள் வாங்கும் முன் இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! சிக்கல் உங்களுக்கு தான்..!!