fbpx

பெரும் சோகம்..!! இறப்பு சான்றிதழ் வாங்க சென்றவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? திருச்சியில் அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்யாமலை ரோடு, உதயம் தியேட்டர் அருகில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மணவாளன் (வயது 60). இவரது தங்கை திருச்சி செந்தண்ணிர்புரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது கணவர் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். அப்போது அரியமங்கலம் பகுதியில் ரயில்நகர் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த மணவாளன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மணவாளனின் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்து அவரை மீண்டும் எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால், அவர் எழவில்லை. இதனைத் தொடர்ந்து அரியமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ பணியாளர்களும், போலீசாரும் மணவாளனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மணவாளனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Chella

Next Post

அனிதா குப்புசாமியின் 2 மகள்களையும் பார்த்துள்ளீர்களா..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

Fri Nov 17 , 2023
தமிழ் சினிமாவில் ஏராளமான பாடகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பிரபல பாடகராக திகழ்ந்து வருபவர்கள் தான் அனிதா மற்றும் குப்புசாமி ஆகியோர். இவர்கள் இருவரும் பிரபல பாடகர்களாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளனர். மேலும், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் பாடல்கள் பாடியுள்ளனர். இவர் கிட்டதிட்ட தனது மனைவியுடன் சேர்ந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை […]

You May Like