கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் காரணமாக தற்போது வரை 1,688 குழந்தைகள் காசாவில் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அனைத்துலக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலில் நாளொன்றுக்கு 120 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில், சுமார் 27 குழந்தைகள் மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
1,400 பேர் காணாமல் போயிருப்பதால், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மேலும், அதிகரிக்கலாம் என்றும் பாலஸ்தீன அனைத்துலக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பிய பாலஸ்தீன குழந்தைகள் இப்போது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.