fbpx

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து…! 21 பேர் பலி…! 18 பேர் படுகாயம்..

இத்தாலியின் வெனிஸ் நகரில் சுற்றுலா பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதனால் தீயும் பற்றி ஏரிந்துள்ளது. இந்த பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேஸ்டரே(Mestre) மற்றும் மார்க்ஹெர(Marghera) மாவட்டங்களை இணைக்கும் பாலத்தில் இருந்து கவிழ்ந்த பிறகு பேருந்து தீப்பிடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து தெளிவான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

விபத்து நடந்த சுற்றுலா பேருந்தில் 40 பேர் பயணம் செய்துள்ளனர், அதில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெனிஸ் கவுன்சிலர் ரெனாடோ பொராசோ கூறினார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.

இந்த விபத்தில் பலியானவர்களில் ஐந்து பேர் உக்ரேனியர்கள் மற்றும் ஒருவர் ஜெர்மன் என்று உள்துறை அமைச்சகத்தின் உள்ளூர் பிரதிநிதியான வெனிஸின் அரசியற் தலைவர் மைக்கேல் டி பாரி கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ சமூக வலைதள பதிவில் விபத்து நடந்த காட்சியை ஒரு பேரழிவு காட்சி என்று விவரித்தார். “இன்று மாலை ஒரு சோகம் எங்கள் சமூகத்தைத் தாக்கியுள்ளது,” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த விப்பித்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ, “பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மோசமான” நிலையில் படோவாவில் இருப்பதாகவும், சிலர் தீக்காயங்களுடன் இருப்பதாகவும்” கூறினார்.

Kathir

Next Post

Leave: கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

Wed Oct 4 , 2023
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கன்மலை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருதி இன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து […]

You May Like