fbpx

பெரும் சோகம்..!! ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதிய கார்..!! 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர் சாலையில் அமர்ந்திருந்தவர் மீது கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூரை அடுத்த பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல இன்று ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளனர். அப்போது, சுமார் 100 – 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த கார், நிலைதடுமாறி சாலையோரம் அமர்ந்திருந்த 50 முதல் 60 வயதுடைய 5 பெண்கள் மீது ஏற்றி இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் அனைவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய நபர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய நபர்களை கைது செய்தனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை கைது செய்யக்கூடாது என்றும் எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் முறையிட்டனர். ஆனால், கைது செய்யப்பட்ட இரண்டு பேரை காவல் வாகனத்தில் ஏற்றிய நிலையில், பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காரில் பயணித்தது மொத்தம் 4 பேர் என்றும், அதில் ஒரு பெண் உட்பட இருவர் தப்பிச் சென்றதாகவும், மீதமிருந்த இருவர் மட்டுமே சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : ”மக்களுக்கு போலீஸ் மீது பயம் இருக்கக் கூடாது”..!! ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ்..!! முதல்வர் பெருமிதம்..!!

English Summary

The tragic incident of 5 women dying on the spot after a car hit a person sitting on the OMR Road near Mamallapuram in Chengalpattu district has caused great sadness.

Chella

Next Post

உங்கள் சிறுநீரகங்களை சைலண்டாக பாதிக்கும் உணவுகள் இவை தான்.. கண்டிப்பா சாப்பிடவே கூடாது..!

Wed Nov 27 , 2024
Let's now look at some foods that can affect or damage kidney function.

You May Like