சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிஷான் நகரில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 9 பேர் இந்தியர்கள்.
இந்த சாலை விபத்தில் காயமடைந்த இந்தியர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இதில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து அறிந்த போது வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் அணுகுவதற்காக பிரத்யேக ஹெல்ப் லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.