Boat accident: மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு ஒன்று, மொராக்கோவிற்கு அருகே கவிழ்ந்ததில் 25 மாலி நாட்டவர்கள் உட்பட குறைந்தது 70 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இருந்து ஸ்பெயினுக்கு படகில் அகதிகள் சென்றது. இந்தப் படகில் 80 பேர் இருந்தனர். ஸ்பெயினில் குடியேறுபவர்களுக்கான அட்லாண்டிக் கடல் பாதையை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த பாதை உலகிலேயே மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த பயணத்தில் படகு கவிழ்ந்து 70 பேர் பலியாகி விட்டனர். 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 25 பேர் மாலியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மாலியில், வேலையின்மை மற்றும் விவசாய சமூகங்கள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ளிட்ட சஹேல் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிலவும் மோதல்கள் காரணமாக அங்குள்ள மக்கள் ஸ்பெய்னில் அடைக்கம் கோரி வருகின்றனர். எனினும் அவர்கள் பயணிக்கும் மொரிட்டானியா மற்றும் மொரோக்கோவின் ஊடாக ஸ்பெயின் வரையாக கடற்பாதை உலகின் மிகவும் ஆபத்தான பாதையாகும். இந்தநிலையில்,2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெய்னை அடைய முயன்று கிட்டத்தட்ட 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக, இடம்பெயர்வு உரிமைகளுக்கான குழுவான வோக்கிங் போர்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Readmore: இனிமேல் ஊசி போட்டால் வலிக்காது!. அதிர்வலை மூலம் செலுத்தும் ஊசி கண்டுபிடிப்பு!. மும்பை ஐஐடி அசத்தல்!