fbpx

ஆண்களின் பாலியல் உறவுக்கு உதவும் பச்சை முட்டை..? எப்படின்னு தெரியுமா..? அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா..?

முட்டை சாப்பிடுவது பற்றி நமக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. முட்டையை இரவில் சாப்பிடலாமா? ஒரு நாளுக்கு எத்தனை சாப்பிட வேண்டும்? தினமும் சாப்பிடலாமா? உடல் எடையைக் குறைக்க உதவுமா? இப்படி பல சந்தேகங்கள் உள்ளன. முட்டை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என நாம் அறிவோம். ஜிம்முக்கு செல்பவர்கள் டயட்டில் நிச்சயமாக சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால், இது பாலியல் ஆரோக்கியத்துக்கும் பலனளிக்குமா என்றும் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. பச்சை முட்டையை சாப்பிடுவது அல்லது முட்டையை தேனுடன் சாப்பிடுவது பாலியல் நலனுக்கு பலனளிக்கும் என சிலர் கூறி வருகின்றனர். உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்!

முட்டை ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நாம் பொதுவாக சாப்பிடும் கோழி முட்டையில் புரதம், லிப்பிடுகள் (கொழுப்பு), கால்சியம், வைட்டமின்கள் ஏ, பி, சி, குளுசிட், இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன. இந்த சத்துகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்குமேத் தவிர பாலியல் நலனுக்கு உதவாது. முட்டையை பச்சையாக சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். ஏனென்றால், முட்டை ஓடுகளில் சால்மோனெல்லா என்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா இருக்கிறது. இதனால் ஃபுட் பாயிசன் ஏற்படலாம்.

65 கிலோ எடைக்கு மேல் இருப்பவர்கள் பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு இருப்பவர்கள், நீரிழிவு நோய், எச்.ஐ.வி அல்லது மெலனோமா வியாதிகள் இருப்பவர்கள் முட்டையை பச்சையாக சாப்பிடாமல் தவிர்க்கலாம். முட்டையில் கொழுப்பு மற்றும் புரத சத்துகள் அதிகமாக இருப்பதால், ஆண்கள் அதிகப்படியான முட்டையை உட்கொள்வது கேடுகளை விளைவிக்கும். வாரத்திற்கு 3-க்கும் மேற்பட்ட முட்டை மஞ்சள் கரு சாப்பிடுவது அல்லது ஒரு நாளில் இரண்டுக்கு மேற்பட்ட மஞ்சள் கரு சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, பக்கவாதம் மற்றும் இன்னும் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருத்தல், உடல் பருமன் அல்லது இருதய நோய் இருப்பவர்கள் அதிகமான முட்டையை சாப்பிடவே கூடாது. சமைத்த முட்டையில் இருக்கும் புரதசத்து எளிதாக செரிமானமடைந்துவிடும். ஆனால், பச்சை முட்டையில் இருக்கும் புரதம் சிலருக்கு செரிமானமாகாமல் இருக்கலாம். இதனால் வாயுத்தொல்லை ஏற்படும். அதிகப்படியான முட்டைக்கு பதிலாக வெங்காயம், முளைகட்டிய பயிறுகள், பாதாம், மற்றும் இறால், நண்டு, சிப்பிகள் மற்றும் கணவாய் போன்ற கடல் உணவுகளை உண்ணலாம். பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படும் ஆண்கள் மது பழக்கத்தை கைவிடுவது நல்லது. தினசரி உடற்பயிற்சி செய்வதும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் நல்லது.

Chella

Next Post

"விஜயகாந்த் இதுல மட்டும் தான் நல்லவர் அண்ணன் சீமான் எல்லாத்தையும் வல்லவர்" - நாதக பொதுக்குழுவில் சாட்டை துரைமுருகன் பேச்சு.!

Tue Jan 16 , 2024
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகளே நிதி வழங்காமல் இருப்பது மிகுந்த மனவேதனையை தருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணன் சீமான் அறிவித்த விதி செருப்பு திட்டத்தில் இதுவரை 209 பேர் மட்டுமே இணைந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார். இது குறித்து விரிவாக பேசிய துரைமுருகன் […]

You May Like