fbpx

ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு..!! 70 காலிப்பணியிடங்கள்..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் மூலம் அரசுப் பணியில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றப்பட்ட நிலையில், புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்திற்கு 28 காலியிடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 7 காலியிடங்களும், வணிக வரி உதவி ஆணையர் பணியிடத்திற்கு 19 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கு 7 காலியிடங்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 காலியிடங்களும், தொழிலாளர் துறை உதவி ஆணையர் பணிக்கு 6 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 நிலைகளில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் : https://tnpsc.gov.in/Document/english/Grp%20I%20notification_English_.pdf

Read More : அதிர்ச்சி..!! நேருக்கு நேர் மோதிய சரக்கு ரயில்கள்..!! 2 லோகோ பைலட்டுகளும் உடல் நசுங்கி பலி..!! 4 பேர் படுகாயம்..!!

English Summary

The Tamil Nadu Public Service Commission has announced that the Group 1 preliminary examination will be held on June 15th.

Chella

Next Post

கும்பகோணம் வெற்றிலை.. தோவாளை மாணிக்க பூ மாலைக்கு புவிசார் குறியீடு..!!

Tue Apr 1 , 2025
Kumbakonam betel nut..Tovalai gem flower garland has a geographical indication..!!

You May Like