fbpx

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் வெளியாகக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55 ஆயிரத்து 41 தேர்வர்கள் எழுதினர்.

ஆனால், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். தற்போது டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கேட்டபோது, விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கான கணினி ஆய்வகம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில், தற்போது கூடுதலாக மற்றொரு ஆய்வகம் அமைக்கப்பட்டு மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினர். குரூப் 2 தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80% நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய 20% பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முடிவடைந்தாலும் முடிவுகளை வெளியிட தயார் செய்வதற்கு கூடுதல் நாட்கள் தேவைப்படும் என்பதால் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதமே முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

ஹோட்டல் அதிபர் மற்றும் காதலி படுகொலை.! கணவன் மனைவி வெறிசெயல்.! கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!

Mon Dec 11 , 2023
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஓட்டல் அதிபர் மற்றும் அவரது காதலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோடியிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ரவி தாகூர் (42) மற்றும் அவரது காதலி சரிதா தாகூர்(38). இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு நிர்வாண கோலத்தில் […]

You May Like