fbpx

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிய நிலையில், இம்மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்பி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழகம் முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் செயல்பாடு சமீபகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு வினாத்தாளில் பதிவெண்களால் குளறுபடி ஏற்பட்டது.

இது ஒருபுறம் இருக்க குரூப் 4 ரிசல்ட் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. ஜூலை மாதம் 24ஆம் தேதி தேர்வர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 18 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 7 மாதங்கள் கடந்தும் இன்னும் குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என நேற்று ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆனது. அதில், டிஎன்பிஎஸ்சியை விமர்சித்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் நிலையை எடுத்து கூறும் வகையிலும் மீம்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், இம்மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Chella

Next Post

”மக்களே எச்சரிக்கையா இருங்க”..!! பிரிட்ஜ் வெடித்து போலீஸ் உட்பட இருவர் பலி..!! பொள்ளாச்சியில் சோகம்.!!

Thu Mar 9 , 2023
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத் (40). இவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அண்மையில் இறந்துவிட்டதால், தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு விட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களவில் அவ்வபோது இந்த வீட்டில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வாளர் சபரிநாத் இன்று காலை வீட்டில் இருக்கும் போது […]
”மக்களே எச்சரிக்கையா இருங்க”..!! பிரிட்ஜ் வெடித்து போலீஸ் உட்பட இருவர் உடல் கருகி பலி..!! கோவையில் சோகம்.!!

You May Like