fbpx

ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்.டி. வரி வசூல் 1.59 லட்சம் கோடி!… கடந்த ஆண்டைவிட 11% உயர்வு!… மத்திய நிதியமைச்சகம்!

ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்.டி. வரி வசூல் சுமார் ரூ.1,59,069 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது. நடப்பாண்டு ஆகஸ்டில், பொருட்களின் இறக்குமதி வாயிலாக கிடைக்கும் வருவாய் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய், சேவைகளின் இறக்குமதி உட்பட, கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயை விட 14 சதவீதம் அதிகரித்துஉள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜி.எஸ்.டி., வசூல் 1.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ஆகஸ்ட், 2023 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் சிஜிஎஸ்டி ரூ. 28,328 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 35,794 கோடி, ஐஜிஎஸ்டி (IGST) ரூ. 83,251 கோடி ( வசூலிக்கப்பட்ட ரூ.43,550 கோடி உட்பட ) மற்றும் சரக்குகளின் இறக்குமதி ரூ.11,695 கோடி ( பொருட்களின் இறக்குமதி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 1,016 கோடி உட்பட ரூ.1,59,069 கோடியாக பதிவாகி உள்ளது. ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.37,581 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 31,408 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளது .செட்டில்மெண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் 2023 இல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் CGST க்கு ரூ. 65,909 கோடியும், SGST க்கு ரூ.67,202 கோடியும் இருக்கும்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, மேம்படுத்தப்பட்ட வரி வசூல் திறன், வணிகங்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வரி ஏய்ப்பு மற்றும் வரி செலுத்துவதை தவிர்ப்பது ஆகியவையும் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Kokila

Next Post

திடீர் உத்தரவு...! மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு...!

Sat Sep 2 , 2023
மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. […]
மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

You May Like