fbpx

Delhi 2024: டெல்லியில் இன்று GST அமலாக்க தலைவர்களின் மாநாடு…!

மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாடு இன்று தொடங்க உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) அமலாக்க செயல்முறையை வலுப்படுத்துவதில் ஒரு நடவடிக்கையாக, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை, அனைத்து மாநில மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் தேசிய மாநாட்டை இன்று டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஒருநாள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பைத் தடுத்தல், தற்போதைய சவால்களை ஆராய்தல், மாநில மற்றும் மத்திய அமலாக்க அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், மாநில மற்றும் மத்திய அமலாக்க அதிகாரிகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவை இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படும்.

Vignesh

Next Post

Shoking: கணவருடன் இந்தியாவுக்கு டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்...!

Mon Mar 4 , 2024
இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் செய்யப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கா பகுதியில் தங்கி இருந்தபோது, கணவரைக் கடுமையாக தாக்கிவிட்டு அப்பெண்ணை 7 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை […]

You May Like