fbpx

ஜிஎஸ்டி போர்ட்டல் முடக்கம்!. கணக்குகளை தாக்கல் செய்ய முடியாமல் தவிப்பு!. காலக்கெடு நீடிப்பு!.

கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

GST: சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) ஜிஎஸ்டி போர்ட்டலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து கணக்குகளை தாக்கல் செய்ய முடியாமல் வணிகர்கள் தவித்து வருகின்றனர்.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி தொடர்பான GSTR-1 கணக்குகளை வணிகர்கள், மாதம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்ற விதத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். வணிகர்கள் தங்கள் கணக்குகளை ஜிஎஸ்டி போர்ட்டலில் தாக்கல் செய்வார்கள். இந்தநிலையில் GSTR-1 மற்றும் GSTR-3B ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கலை மேற்கொள்ள இன்றே(ஜன.11) கடைசி நாளாகும்.இந்தநிலையில், திடீரென ஜிஎஸ்டி போர்ட்டலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் தவித்து வருகின்றனர். மிக முக்கியமான நேரத்தில் இணையதளம் முடங்கியதால் வணிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

24 மணிநேரத்திற்கு மேலாக போர்ட்டல் முடங்கியதால், வணிகர்கள் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசின் CBIC2 அமைப்பு கணக்கு தாக்கலுக்கான காலக்கெடுவை மேலும் இரு நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் வணிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Readmore: கள்ளக்காதலை கண்டித்ததால் அக்கா மகனுக்கு சூனியம் வைத்த பெண்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!! கர்நாடகாவில் அதிர்ச்சி..!!

English Summary

GST Portal Freeze!. Trouble filing accounts! Deadline extension!.

Kokila

Next Post

பயணிகள் அதிர்ச்சி..!! ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு..!! இனி குறைந்தபட்சமே ரூ.50..!! பிப்.1 முதல் அமல்..!!

Sat Jan 11 , 2025
Auto drivers have announced that they will charge a minimum fare of Rs. 50 from the 1st.

You May Like