fbpx

குட் நியூஸ்..! சிமென்ட் வகை மற்றும் Fly Ash எனப்படும் எரி சாம்பல் மீதான GST வரி அதிரடியாக குறைப்பு…!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; சிமென்ட் வகை மற்றும் Fly Ash எனப்படும் எரி சாம்பல் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு. தியேட்டர்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல, புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி!... ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தமிழக, ஹரியானா வீராங்கனைகள் இருவர் நீக்கம்!

Wed Jul 12 , 2023
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக, ஹரியானாவை சேர்ந்த இரு வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் நீக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் 25ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். இந்திய புராணங்களில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான ஹனுமன், கான்டினென்டல் ஆளும் குழு நிறுவப்பட்ட 50 வது […]

You May Like