fbpx

பெற்றோர்களே கவனம்… குழந்தை தொழிலாளர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!

குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் “பொழுதுபோக்கு தொழில்துறை மற்றும் வணிக ரீதியான பொழுதுபோக்கு செயல்பாடு ஆகியவற்றில் குழந்தைகள் பங்கேற்பை ஒழுங்குபடுத்தும்  வழிகாட்டு நெறிமுறைகளை” வெளியிட்டுள்ளது. “ஊடக வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தத்திற்கான” ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையுடன் புதிய சட்டங்கள், கொள்கைகள் குழந்தைகளின் நல்லார்வம் ஆகியவற்றை இணைத்து இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் இணையதளத்தில் https://ncpcr.gov.in/ வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மீது பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. 31.07.2022 வரை கருத்துக்களை தெரிவிக்கலாம். முன்னதாக பொழுதுபோக்கு தொழில்துறையில் குழந்தைகள் பங்கேற்பை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2011-ல் வெளியிடப்பட்டன. இதன் பிறகு சிறார் நீதி (குழந்தைகளின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, குழந்தை தொழிலாளர் திருத்த சட்டம் 2016, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளின் பாதுகாப்பு (போக்சோ) சட்டம் 2012 போன்ற புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இயற்றப்பட்டன என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.

Also Read: எல்லாரும் கவனம்… 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல்…! ஆன்லைன் மூலம் மட்டுமே… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!

Vignesh

Next Post

1 முதல் தொழில் முறை படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 25,000 வரை  கல்வி உதவித் தொகை...! விண்ணபிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Jul 23 , 2022
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள்,  2022-2023  ஆம் நிதி ஆண்டில்,  கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம்   வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1000 முதல் ரூ. 25,000 வரை,  கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக https://scholarships.gov.in என்ற  […]

You May Like