fbpx

கின்னஸ் சாதனை முதியவர் காலமானார்!… 11 குழந்தைகள், 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக் குழந்தைகள்!

RIP: உலகின் வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற முதியவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 114.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்தவர் ஜுவான் விசென்டே, அடுத்த இரண்டு மாதங்களில் தனது 115 பிறந்தநாளை கொண்டாட தயாராகி வந்த நிலையில், உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். இவர் கடந்த 1909 மே மாதம் 27-ந் தேதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். அவரது பெற்றோருக்கு மொத்தம் 10 குழந்தைகள். அதில் இவர் 9-வது குழந்தையாக பிறந்தார். கடந்த 2022-ம் ஆண்டில் இவருக்கு 112 வயதான போது உலகின் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காராக மாறினார். தற்போது மோராவுக்கு 114 வயதாகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் மோரா நேற்று காலமானார்.

இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக் குழந்தைகள் மற்றும் 30 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் நாட்டினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அதிபர் நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டினர் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Readmore:கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை தெளிவான விளக்கம்..!! மாணவர்களே இதை நோட் பண்ணீங்களா..?

Kokila

Next Post

அரசுப் பள்ளிகளில் ’டிஜிட்டல்’ பாடம்..!! ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Fri Apr 5 , 2024
அரசு நடுநிலைப் பள்ளிகளில் டிஜிட்டல் வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38,000-க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. பல பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால், கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே, அரசின் சார்பில் நலத்திட்டங்களும் கொண்டு வர முடியும் என்ற […]

You May Like