குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளி வந்துள்ளன. இதில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா?
குஜராத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,90,89,765 அதில் 100 வயது கடந்தவர்கள் எண்ணிக்கை 10460 ஆக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9,87,999 ஆகவும், முதல் முறை வாக்காளர்கள் 4,61,494 ஆகுவும் உள்ளனர். வாக்காளர்களில் ஆண்கள் 2,53,36,610 பேர் , பெண்கள் 2,37,51,738 மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1417 ஆவர்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து குஜராத் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டத் தேர்தல் எனவும் 5ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முதல் கட்ம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் நவ்பர் 14. வேட்பு மனு பரிசீலனை நவம்பர் 15ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் நவம்பர் 21 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசீலனை நவம்பர் 18ம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் நவம்பர் 21 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,782 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதுஇரண்டு கட்டங்களில் டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.