fbpx

#gujarat-EXITPOLL2022 : வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!! குஜராத்தில் பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்கும்!!!

குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று நடைபெற்று மாலை 5.30 மணியுடன் முடிவடைந்தது.

இந்த முறை குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிகழ்கிறது. எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது கடினம் என்று சொல்லப்பட்டாலும் புதிய வியூகங்களுடன் ஆம் ஆத்மி குஜராத்தில் களமிறங்கியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பல்வேறு தேசிய ஊடகங்கள், கருத்து கணிப்பு நிறுவனங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 128-148, CONG: 30-42, AAP: 02-10, OTHERS: 0-3. என வெளியாகியுள்ளது.
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 117-140, CONG: 34-51, AAP: 6-13, OTHERS: 1-2. என வெளியாகியுள்ளது.
NDTV கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 128, CONG: 44, AAP: 7, OTHERS: 3என வெளியாகியுள்ளது.
நியூஸ் 18 கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 117-140, CONG: 34-51, AAP: 6-13, OTHERS: 0. என வெளியாகியுள்ளது.
டிவி9 குஜராத்தி கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 123-130, CONG: 40-50, AAP: 03-05, OTHERS: 03-07. என வெளியாகியுள்ளது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 129-151, CONG: 16-30, AAP: 09-21, OTHERS: 02-06. என வெளியாகியுள்ளது.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு படி 182 தொகுதிகளில் BJP: 139, CONG: 30, AAP: 11, OTHERS: 02. என வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி பார்த்தால் குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என்றே தெரிகிறது. என்ன நடக்கும் என்று டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னேர் தெரியவரும்.

Kathir

Next Post

கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!

Mon Dec 5 , 2022
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் சாலை ஓரமாக அவர் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில்தான் தனலட்சுமி 2 நாட்களுக்கு முன்னர் பூக்குளம் பேருந்து நிலையத்தில் தலையில் பலமான காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவின் மூலமாக ஆய்வு நடத்தி வந்தனர். அந்த […]

You May Like