fbpx

பழிதீர்க்க காத்திருக்கும் குஜராத்!… ‘சிங்க நடையை’ தொடரும் முனைப்பில் சிஎஸ்கே!… அகமதாபாத்தில் இன்று அதிரடி!

CSK VS Gujarat: ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த மேட்ச் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில்,ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மீண்டும் குஜராத் டைட்டன்சை இன்று (மே 10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு ஏற்பட்டுள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

Readmore: UPSC 2024 தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு முடிவுகள் வெளியீடு.!! டவுன்லோட் செய்வது எப்படி .?

Kokila

Next Post

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து...! முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் இரங்கல்...!

Fri May 10 , 2024
சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (மே 9) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் […]

You May Like