குஜராத் தேர்தலில் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்தால் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி வழங்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். குஜராத்தில் நடந்த பிரசாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். ஆம் ஆத்மி கட்சியை மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விவசாயக் கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
மேலும் பா.ஜ. கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக் கொண்டால் கூட , ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். குஜராத்தில் தற்போது பா.ஜ. ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் ஆம் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ. கட்சியைச் சேர்ந்தவர்களும் இதன் மூலம் கண்டிப்பாக பலன் அடைவார்கள் என்றார். குஜராத்தின் ராஜ் கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறுகையில் , ’’ பா.ஜ. கட்சிக்காரர்களோ நீங்கள் அந்த கட்சியிலேயே இருங்கள் ஆனால் ஆம். ஆத்மிக்காக பணியாற்றுங்கள். பா.ஜ. சார்பில் பலர் பணம் வாங்கியுள்ளீர்கள் அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் வேலையை மட்டும் எங்களுக்காக செய்யுங்ள், ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை… ’’ என்றார்.
’’எங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் வேண்டாம். ஆனால் பா.ஜ.க. அவர்களின் தலைவர்களை வைத்துக் கொள்ளலாம், பா.ஜ.வில் கிராமத்தில் சில இயக்கங்கள் இயங்கி வருகின்றன. நான் அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். பல ஆண்டுகள் கழித்தும் கூட பா.ஜ.க. அவர்களுக்கு இதே போல தொடர்ந்து அவர்களுக்காக பணம் தருவது உள்ளிட்டவற்றை செய்யுமா? . என்றார்…
தற்போது ஆட்சியில் உள்ள பா-ஜ.க. இலவசமாகவோ தரமான கல்வியையோ அளிக்கவில்லை, பாஜவிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச திட்டங்கள் வழங்கவில்லை. ஆனால் , ஆம் ஆத்மி கட்சி அதை செய்யும். நாங்கள் டெல்லியில் ஆட்சியைத் தொடங்கியபோது இலவசமாக மின்சாரம் வழங்கினோம், அதுபோல உங்களுக்கும் இங்கு கிடைக்கும், 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம் , அதே போல உங்களுக்கும் இங்கு கிடைக்கும். உங்கள் குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்கவும் தரமான கல்வியை வழங்கவும் ஆம் ஆத்மி காத்திருகின்றது. இலவசமான மற்றும் தரமான சிகிச்சை அளித்து உங்கள் குடுமபத்தில் உள்ள பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் . நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருங்கள் உங்கள் கலவரத்தை தேர்தலில் வாக்குகளாக ஆம் ஆத்மிக்கு காட்ங்கள்’’ என்றார்.