காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என 23 தலைவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினர். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெயரளவில் நீங்கள் செயல்பட்டுக்கொன்றிருக்கின்றீர்கள்.
முடிவுகள் அனைத்தையும் ராகுல் காந்தியும் அவரது பாதுகாவலர்கள் எடுக்கின்றார்கள். இது முக்கியம் கிடையாதுதான். மூத்த தலைவர்களின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் உணரவில்லை. மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் முடிவுகள் எடுக்கும் கலாச்சாரம் காலப்போக்கில் சீரழிந்துவிட்டது. என சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
காங்கிரஸ் கட்சி மேலிடத் தலைவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆகஸ்ட் 26ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு விலகியுள்ளார். அதே நேரத்தில் அவர் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவார்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது.
10 நாட்களுக்கு புதிய கட்சியை அறிவிக்க உள்ளதாக அவர் ஏற்கனேவ தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த கட்சியின் பெயர் உருது வார்த்ததைகள், சமஸ்கிருத வார்த்தகளாக இருக்காது என மக்கள் அனைவருக்கும் புரியும்படியான இந்திய பெயராக இருகு்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ’’ஜனநாயக ஆசாத் விடுதலை கட்சி ’’ என்ற கட்சியை அவர்தொடங்கியுள்ளார்.