fbpx

மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கு..!! சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் 2016இல் பல இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி, மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த போது, இந்த வழக்கை எம்.பி., எல்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வழக்கில் உள்ளதாக விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! தமிழில் எழுத படிக்க தெரியுமா..? சம்பளம் எவ்வளவு..?

English Summary

CBI court orders transfer of Gutka abuse case against former AIADMK ministers C.Vijayabaskar, Ramana to special court to hear criminal cases against Chennai MP, MLA

Chella

Next Post

BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி..? சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்..!!

Mon Jul 8 , 2024
Sandeep Roy Rathore, who was the Commissioner of Police in Chennai, has been transferred.

You May Like