குட்கா வழககில் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது..
கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

இதையடுத்து சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டது..
இதனிடையே குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் குட்கா வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.. குறிப்பாக உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.. இதன் மூலம் குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், பி.வி. ரமணா உள்ளிட்ட 12 பேரை வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி கிடைத்துள்ளது.. எனவே குட்கா வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது..