fbpx

ஆண்களே இனி ஜிம் பக்கமே போகாதீங்க!… ஆண்மைக்குறைவுக்கு காரணமே இதுதான்!… ஆய்வில் அதிர்ச்சி!

ஜிம்மில் செய்யும் உடற்பயற்சி செயல்பாடுகளால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Reproductive BioMedicine Online என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் 152 உடற்பயிற்சி ஆர்வலர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஜிம்முக்குச் செல்லும் 79% ஆண்கள் உட்கொள்ளும் ஈஸ்ட்ரோஜன் அடங்கிய புரதசத்துப் பொருட்களால் அவர்களது வாழ்க்கையில் ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களிடம் இதைப்பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (52%) இதைப்பற்றி முன்பே யோசித்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், 14% பேர் மட்டுமே ஜிம்மில் செய்யும் உடற்பயற்சி செயல்பாடுகளால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதியுள்ளனர்.

38% உடன்படவில்லை மற்றும் 28% உடன்படிக்கையுடன், ஆண்மைக்குறைவு பிரச்சினையைக் காட்டிலும் ஜிம் உடற்பயிற்சி முக்கியம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, 38 சதவீதம் பேர் இல்லை என்றும் 28 சதவீதம் பேர் ஆம் என்றும் கூறியுள்ளனர். பங்கேற்ற பெண்கள் ஆண்களுக்கு உடற்பயிற்சி காரணமாக ஏற்படும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினை பற்றி அதிகம் அறிந்திருந்தனர் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர். மியூரிக் கல்லாகர், “ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது ஒரு நல்ல விஷயம். ஆண்களைப் பொறுத்துவரை புரதச்சத்துக்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அவற்றில் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அதிக அளவு இருக்கிறது. அதிகப்படியான பெண் ஹார்மோன் ஒரு ஆண்ணில் உற்பத்தியாகும் விந்தணுவின் அளவு மற்றும் தரத்தைப் பாதிக்கும்” எனக் கூறுகிறார்.

இதனால், ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், விந்தணுக்கள் சுருங்குதல் மற்றும் விறைப்புச் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “மலட்டுத்தன்மை என்பது அதிகரித்து வரும் கவலைக்குரிய பிரச்சனையாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 6 பேரில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது” என்றும் மியூரிக் கல்லாகர் சுட்டிக்காட்டுகிறார்.

Kokila

Next Post

திடீர் மூச்சுத்திணறல்..!! விஜயகாந்த் குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை..!! வெளியானது அதிர்ச்சி தகவல்..!!

Thu Nov 30 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடல்நலம் குறித்து வதந்திகள் கிளம்பின. இதையடுத்து, தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை கடந்த […]

You May Like