fbpx

அடிக்கடி கோபப்படும் எச்.ராஜா ! ப்ரஸ் மீட்டில் கடுப்பை கிளப்பிய நிரூபர்கள்!

பத்திரிகையாளர்களின் கேள்வியால் கடுப்பான எச்.ராஜா ’இப்படி பேசுவீர்களா’, கெட் அவுட் ? என நிரூபர்களை கடிந்துகொண்டார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசியபோது மகாபாரதம் குறித்த கேள்வியை கேட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்கின்றார் எச்.ராஜா. இந்நிலையில் கேள்வி கேட்டால் கூட அது அவருக்கு கடுப்பாகி விடுகின்றது.

கோயில் சிலைகள் திருடு போகின்றது என்றால் அதற்கு காரணம் இருக்கின்றது. பயன்படுத்தாத குறைவாக பயன்படுத்தப்படும் கோயில்களில் சிலைகள் காணாமல்போகின்றது. என தெரிவித்தார். பழனி கோவிலில் நவபாஷன சிலை கூட திருடு போகப்போகின்றது என கூறியுள்ளார். வள்ளலார் யார் அவரின் அடையாளம் என்ன திருவள்ளுவர் எப்படி இருந்தார். அவர் உருவத்தையே இவர்கள் மாற்றி வைத்து காவி உடை அணிவித்துள்ளார்கள் என எங்களை குற்றம்சாட்டுகின்றீர்களே .. வல்லளாருக்கு திருநீறு இல்லாத படத்தை வைத்து முதல்வர் ஸ்டாலின் தனது நிகழ்ச்சியில் பயன்படுத்தி உள்ளார். … நாய் நக்கியது போல அவர் நெற்றியில் ஒன்றும் இல்லாமல் இருந்தது என சுட்டிக்காட்டினார் எச்.ராஜா.

இது தவறில்லையா ? செய்தியாளர்கள் இதை எல்லாம் கண்டிக்க மாட்டீர்களா? உங்கள் முதலாளிகள் இந்து விரோதிகளா ? இல்லை நீங்கள் விரோதிகளா? என கூறினார். அப்போது குறுக்கிட்டு வள்ளலாருக்கு திருநீறு இருந்தது என்பதற்காக அவரை இந்து என சொல்ல முடியாது. அனைத்து சமயமும் சமம் என்பது தானே அவர் கொள்கை என கூறினார்.

ஆனால் அதை எச்.ராஜா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்து விரோதிகள் நீங்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என பேசினார். திட்டமிட்டுதான் நீங்கள் பேசுகின்றீர்கள். என கடுமையாக திட்டினார். கால்டுவெல் எதையோ எழுதி வைத்து இருக்கின்றான் அதை படித்தீர்கள் .. என குறிப்பிட்டார். கற்பனைகளை புனைவுகளை படிக்கின்றீர்கள் என கூறினார். இதற்கு குறுக்கிட்ட நிரூபர் மகாபாரதம் மாதிரியான புனைவா எனக் கேட்டார். இதனால் கடுப்பான எச்.ராஜா… உங்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.. கெட் அவுட் என கூறிவிட்டு கிளம்பி சென்றார்.

Next Post

 தமிழிசையின் உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்த லோன் ஆப்! நடவடிக்கை பாயுமா?

Thu Oct 13 , 2022
தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் உருவப்படத்தை ஆபசமாக சித்தரித்து லோன் ஆப் ஒன்று மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோன்ஆப் மோசடி என்பது நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய மோசடியாக உருவெடுத்து வருகிறது. அவசர தேவைக்காக சிலர் ஆபத்தை அறியாமல் லோன் ஆப்பில் கடன் வாங்குவதும் பின் அவர்கள் மொபைலை ஹேக் செய்து அந்தநபர் மற்றும் அவர்களின் மொபைலில் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் உறவினர்களுக்கு […]

You May Like