fbpx

சவுக்கு சங்கர் குறித்து ஹெச்.ராஜா போட்ட ட்வீட்.. பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்…

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.. மேலும், சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை..! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்றும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.. அவரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.. இதனால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அதன்படி சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ என்ன டேட்டா திருடன் கைதா..” என்று குறிப்பிட்டுள்ளார்.. ஹெச்.ராஜாவுக்கு இந்த ட்வீட்டுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.. அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்டதால் தான் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றும், சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்காததால் அவர் சிறை செல்கிறார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Maha

Next Post

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லையா...? உடனே ஆன்லைன் மூலம் செய்து முடிக்க வேண்டும்...!

Fri Sep 16 , 2022
பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும்‌ முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள்‌ வேலைவாய்ப்பு அலுவலக […]

You May Like