fbpx

இன்ஸ்டாவில் பழக்கம்..!! வாட்ஸ் அப்பில் நிர்வாணமாக நின்ற பேராசிரியை..!! அதிர்ந்துபோன கணவர்..!! நடந்தது என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஹடப்சர் பகுதியில் வசித்து வரும் 36 வயது பல்கலைக்கழக பேராசிரியை ஒருவருக்கும் பீகாரை சேர்ந்த மாயங்க சிங் என்ற 26 வயது மாணவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த மாணவர் பேராசிரியையுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பேசத் தொடங்கியுள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் அரட்டை அடிக்கத் தொடங்கிய நிலையில், செல்போன் எண்களை பகிர்ந்து பின்னர் வாட்ஸ் அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு நாள் பேராசிரியை அதிர வைக்கும் செயலில் மாணவர் மயாக் சிங் ஈடுபட்டுள்ளார். வீடியோ காலில் பேராசிரியை வரச் சொன்ன மயாங், ஆடைகளை கலைந்து நிர்வாணமாகக் கூறி வற்புறுத்தியுள்ளார். இதை செய்யவில்லை என்றால் தன்னிடம் பேசும் விஷயங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பல்கலைக்கழகம் முழுவதும் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன பேராசிரியையும் வீடியோ காலில் நிர்வாணமாக நின்றுள்ளார். இதை பதிவு செய்து வைத்துக்கொண்ட மயாங், தனக்கு ரூ.4 லட்சம் பணம் தர வேண்டும் இல்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பேராசிரியையின் கணவருக்கும் அந்த வீடியோவை அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவரும், பேராசிரியையும் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் செல்போன் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் மயாங்கை காவல்துறை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அடடே..!! பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ளும் சர்ச்சை நாயகன்..? எப்படியும் சண்டைக்கு பஞ்சம் இருக்காது..!!

Mon Jun 26 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகரும், பிரபல யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, 7ஆவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அந்தவகையில், பிக்பாஸ் 7வது சீசன் ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ள பிரபலங்கள் […]

You May Like