fbpx

”விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலே மாறியிருக்கும்”..!! ரஜினிகாந்த் இரங்கல்..!!

விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் வரிசையாக வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருக்கோவிலூர், மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் ரத்து செய்துள்ளார். அவர் தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவர் ஒரு அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவரை கடைசியாக பொதுக்குழுவில் பார்த்த போது எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.

அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார். தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ரஜினிக்கு கொடுத்த அதே மருந்துதான்!… விஜயகாந்தின் மொத்த வாழ்க்கையும் போயிடுச்சு!

Fri Dec 29 , 2023
மக்கள் மனதில் கேப்டனாக என்றும் வாழும் நடிகர் விஜயகாந்த், இன்று நம்மோடு இல்லை. இப்படி ஒரு நாள் வந்திருக்கவே கூடாது என தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு விஜயகாந்த் ஒரு சிறந்த தலைவனாக மட்டுமல்லாமல் ஏழைகளின் நாயகனாகவும் விளங்கினார். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தார். மேலும் முதன் முதலில் சினிமாக்காரர்களுக்கு இலை போட்டு வயிறார சாப்பாடு போட்ட […]

You May Like