fbpx

’ஒரே ஒருமுறை பண்ணிக்கலாம்’..!! தொல்லை கொடுத்த மாணவன்..!! எலி பேஸ்டை சாப்பிட்டு உயிரை மாய்த்த மாணவி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 19 வயது மாணவி ஒருவர் தேவக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி என்ற இளவரசன் (22) மற்றும் கல்லூரி மாணவன் பாலகணேஷ் (19) என்ற மாணவனுடன் நட்பு ரீதியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவன் பால கணேஷ் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவரது ஆசைக்கு இணங்காமல் அவரது நட்பை மாணவி தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவனின் தொல்லை தாங்க முடியாமல், மாணவி எலி பேஸ்டை சாப்பிட்டுள்ளார். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில், மாணவனின் தொல்லை தாங்க முடியாமல் எலி பேஸ்டை சாப்பிட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே, மேல் சிகிச்சைக்காக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் மரண வாக்குமூலம் அடிப்படையில் பாலகணேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் பசுபதியின் மீது மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்ததால் இருவரையும் காரைக்குடி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் பாலகணேஷின் செல்போன் ஆடியோக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி வருவதகாவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

’என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு’..? வாடகை வீட்டில் வசிப்பவர்களே உஷார்..!!

Wed Feb 8 , 2023
வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு வீட்டில் ஆணி அடிக்கக்கூடாது, முறை வாசல் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகளை வீட்டின் உரிமையாளர்கள் விதிக்கப்படுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாட்கள் உறவினர்கள் வந்து தங்கினாலே, அதற்கும் ஒரு சார்ஜ் போட்டு கட்டணம் வசூலிப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது ஒருபடி மேலே போய், வாடகை வீட்டில் மீன் வளர்க்க 12,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்த சம்பவம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. […]

You May Like