fbpx

தலைமுடி விற்பனை ரூ.105 கோடி.! 7 மாதத்திற்கான உண்டியல் காணிக்கை மட்டும் இவ்வளவு கோடியா..?

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, நீளத்திற்கு ஏற்ப தரம் பிரித்து, ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 9 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள தலை முடியை தேவஸ்தான நிர்வாகம் 105 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை தொடர்பான விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி 7 மாதங்களில் ரூ. 827 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

இந்தியாவின் 'சமுத்ராயன்' திட்டம்!… மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பும் ஆய்வுக் கப்பல் 2026-ல் செயல்பாட்டுக்கு வரும்!

Sat Aug 5 , 2023
தாதுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 6 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலில் மனிதனை அனுப்பும் இந்தியாவின் சமுத்ராயன் திட்டத்தின் முதற்கட்ட பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என்றும் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானியல் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகள் இஸ்ரோ சார்பில் மேற்கொள்ளப்படும் வரும் நிலையில், பூமியில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு பரந்து விரிந்து இருக்கும் கடலுக்கு அடியில் இருக்கும் தாதுக்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக மனிதர்களை […]

You May Like