fbpx

’காலையில பாட்டு போட்டதும் அரைகுறை ஆடையுடன்’..!! பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய கூல் சுரேஷ்..!!

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இதில், கூல் சுரேஷ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து தனது நடவடிக்கைகளால் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஃபன் மெட்டீரியலாக மாறியிருக்கிறார். குறிப்பாக, பவா செல்லதுரை ஓட்டம் கதையை சொல்லி முடித்த பிறகு தனது மனைவியை நினைத்து சுரேஷ் உருகிய சம்பவமும் அரங்கேறியது. இதற்கிடையே, எப்போதும் இல்லாத மாதிரி இம்முறை 2வது நாளிலேயே எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் பவா செல்லதுரை, அனன்யா, ஜோவிகா, பிரதீப், யுகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் இருக்கின்றனர். இவர்களில் யுகேந்திரனும் பிரதீப்பும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முதல் வாரத்திலேயே எவிக்‌ஷன் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் ரசிகர்களிடையே இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு கூல் சுரேஷ் வந்தது தான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. கடைசி நிமிடத்தில் யாரும் இல்லை என்பதால் இவரை அழைத்துவிட்டார்கள் போல என பலரும் கிண்டல் செய்தனர். முன்னதாக கூல் சுரேஷ் பிக்பாஸ் குறித்து தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் கூறுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு தேவை இல்லை. எத்தனை கோடி கொடுத்தாலும், நான் போகமாட்டேன். என்னங்க பிக்பாஸ் சின்ன சின்ன பொண்ணுங்களை எல்லாம் கூப்பிட்டு வந்து காலையில பாட்டு பாடுனதும் அரைகுறை ஆடையுடன் ஆட விடுறாங்க. பிக்பாஸ் டைட்டில் பட்டம் வாங்கி வெளியே வந்து யார் பெரிய இடத்திற்கு போயிருக்காங்க சொல்லுங்க பார்க்கலாம் “ என்றார்.

Chella

Next Post

உஷார்..!! கேஸ் சிலிண்டர் மாற்றும் போது கவனம்..!! தீவிபத்தில் சிக்கி இருவர் பலி..!! நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

Thu Oct 5 , 2023
வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் தீவிபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி. இவரது வீட்டில் சிலிண்டர் மாற்றும் போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இன்று காலை திடீரென சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்போது, வீட்டில் இருந்த பார்த்தசாரதி, மனைவி தனலட்சுமி ஆகியோர் தீயில் சிக்கிக் கொண்டனர். மேலும், சிலிண்டர் டெலிவரி செய்ய வந்த […]

You May Like