fbpx

10th Hall Ticket நாளை பிற்பகல் 2 மணி முதல்…! ஆன்லைன் மூலம் எப்படி பதிவிறக்கம் செய்வது…? முழு விவரம்

10th Hall Ticket : நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை; தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 HALL TICKET DOWNLOAD”என்ற வாசகத்தினை “Click செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் (Science Practical Examinations) 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மார்ச்/ஏப்ரல்-2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: 10th Hall Ticket | Candidates who have applied online (including Tatgal) for March/April 2024 10th Class Public Examination can download the Hall Ticket from 24.02.2024 (Saturday) from 2 pm through the website www.dge.tn.gov.in

Vignesh

Next Post

Tn Govt 2024: சூப்பர் திட்டம்...! தமிழக அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன்...! காலை 10 மணி முதல்

Fri Feb 23 , 2024
Tn government: புதிய தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்கள். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் ; புதிய தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இதன்பொருட்டு, புதிதாக உற்பத்தி, சேவைமற்றும்வியாபாரம் சாந்த தொழில்கள் […]

You May Like