12-ம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 14-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வரும் ஜூன் 14-ம் தேதி மதியம் முதல் www dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், செய்முறை தேர்வுகள் குறித்து தனித் தேர்வுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வர்களும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வர்கள் இயக்ககம் தெரிவித்துள்ளது.